Times of Puducherry
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளரான ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் ஒவ்வொரு வருடமும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி வருகிறார். அந்த வகையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் 59-வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்தார். இதில் சிறப்பு விருந்தினராக பிறந்தநாள் விழா காணும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.