Times of Puducherry
புதுச்சேரியில் தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த படைத்தனர் புதுவையில் திருட்டு மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்புள்ள 260 செல்போன்களை புதுவை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேடு காவலர் சமுதாய கூடத்தில் நடந்தது. சைபர் கிரைம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகவ் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் விரைந்து கண்டறிந்து மீட்பதில் புதுச்சேரி சைபர் கிரைம் முதலிடத்தில் உள்ளது. செல்போன்கள் காணாமல் போனால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம். பெண்களுக்கு எதிரான சைபர் மீட்கப்பட்டதில் புதுவை,தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலத்தைசேர்ந்தவர்களின் செல்போன்களும் உள்ளன. உரிய ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் அவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்படும். பொதுமக்கள் தங்களது செல்போன்களை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்த முடியாத வகையில பாதுகாப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டும். சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை 'விரைவாக கையாளும் வகையில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் அளிக்கும் புகார்கள் ரசியம் காக்கப்படும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.