Times of Puducherry
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிபகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் இடங்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள்,ஜெனரேட்டர்கள் போக்குவரத்து இடையூறாக உள்ளன. இதனால் குப்பை தேக்கம், கொசு உற்பத்தி, தொற்று நோய்கள் பரவல் அபாயம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, இவ்வாகனங்கள் உபகரணங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக அகற்றி, தங்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது அகற்றப்படாத வாகனங்கள் உபகரணங்கள், புதுச்சேரி நகராட்சி போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி அகற்றப்பட்டது. பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ்கள் உழவர்கரை நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டப்பட்டது. பல இடங்களில் இவைகள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. வாகனங்கள் இன்று (07-09-2026) உழவர்கரை நகராட்சி ஆணையர் . ரா. அருண் அய்யாவு நேரடி மேற்பார்வையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், உழவர்கரை துணை வட்டாட்சியர், காவல் துறை
அதிகாரிகள் முன்னிலையில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன உரிமையாளர்கள் ஒரு வார கால்த்திற்க்குள் உழவர்கரை நகராட்சி ஆணையர் அணுகி அபராத தொகையை செலுத்தி பொது இடங்களில் வாகனத்தை நிறுத்த மாட்டேன் என உறுதி அளித்து வாகனங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சதில் வாகனங்கள் சட்ட
விதிகளின்படி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.