Times of Puducherry

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
10 Sep 2026 • 11:55 AM

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு பதிலாக மாற்று இடம் வழங்க

வேண்டும் என்று கருத்து கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். விமான நிலையம் புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கு தற்போது விமான ஓடுதளம் 1,500 மீட்டர் மட்டுமே உள்ளது. இதனால் 90 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் மட்டுமே வந்து செல்ல முடிகிறது. புதுவையில் இருந்து ஐதராபாத்,பெங்களூரு, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுவைக்கு சர்வதேச அளவில் இயக்கப்படும் பெரிய விமானங்கள் வந்து செல்ல 2 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு மேல் ஓடுதளம் தேவைப்படுகிறது. எனவே 2,300 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலத்தில் ஓடுதளம் அமைக்க முடிவு

செய்யப்பட்டுள்ளது விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி 572 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதில் தற்போது 170

ஏக்கர் நிலம் உள்ளது. புதுவை பகுதியில் நரிக்குறவர் காலனி மற்றும் 48 ஏக்கரில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்பட 185 ஏக்கர், தமிழகத்தில் இருந்து 217 ஏக்கர் என மொத்தம் 402 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்க சமூக மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் தலைவராக ஹேப்சிபா நியமிக்கப்பட்டு உள்ளார். இதில் அருண், கணேசன், ரேவதி, காளமேகம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள், கருவடிக்குப்பம் பகுதி மக்களிடம் நேற்று காலை கருத்து கேட்டனர். இதற்கான கருத்துகேட்பு கூட்டம் லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பெரும்பாலானோர், தங்களுடைய நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தினால் அதற்கு பதிலாக மாற்று இடத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது சிலர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை

லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து, இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கருத்து கேட்பு

கூட்டம் நடக்கிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top