Times of Puducherry
புதுச்சேரி உயர்கல்வி நிறுவனங்களில் ஒப்பந்த பேராசிரியர்கள், ஒப்பந்த துணை, இணை பேராசிரியர்கள், ஊழியர்கள் ஊதியம், பணிக்கால நீட்டிப்பு மற்றும் பணிப்பாதுகாப்பை புதுவை அரசு உறுதி செய்ய வேண்டும் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கத் செயலாளர் பாலா கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளார் அந்த மனுவில்:
புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கத்தின் சார்பாக, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தையும், பொது சுகாதாரத்தையும்கருத்தில் கொண்டு, ஒப்பந்த ஆசிரியர்களின் முக்கிய பங்கு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு சுயாட்சி நிறுவனங்கள் மற்றும் சங்கக் கல்லூரிகளில், மற்றும் அரசு கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும், தேசிய மருத்துவ ஆணையம் (NMC), DCI, AICTE, UGC போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்யவும் பல ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் (Contract basis) ஒப்பந்த பேராசிரியர்கள், ஒப்பந்த துணை, இணை பேராசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் (Contract Faculty & Employees) ஒப்பந்த முறையில்நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகரான பணி:
இந்த ஒப்பந்த ஒப்பந்த பேராசிரியர்கள், ஒப்பந்த துணை, இணை பேராசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகராகவே கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப்பணிகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகளைச் செய்து வருகின்றனர். நிரந்தர ஆசிரியர்களைப் போலவே அனைத்துப் பணிகளையும் செய்தபோதிலும், இவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
முறையான நியமன செயல்முறை:
இவ்வாசிரியர்கள் அனைவரும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு விதிகளின்படிநியமிக்கப்பட்டுள்ளனர். முறையான நேர்காணல் நடத்தப்பட்டே எனவே இவர்களின் தகுதியும் நியமனமும் முழுமையாகச் சட்டப்பூர்வமானதாகும். (ஒருசிலரை தவிர்த்து) ஒப்பந்த நீட்டிப்பு தாமதத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:
ஒப்பந்த ஆசிரியர்களை ஒப்பந்த பேராசிரியர்கள், ஒப்பந்த துணை, இணை பேராசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் திடீரெனப்பணியிலிருந்து நீக்குவது அல்லது அவர்களின் ஒப்பந்த நீட்டிப்பு மற்றும் ஊதிய விநியோகத்தில் தேவையற்ற தாமதம் செய்வது மிகப்பெரியபாதிப்புகளை ஏற்படுத்தும்:
கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்படும். மாணவர்களின் கல்வி மற்றும் பாடத்திட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்.அரசு கற்பித்தல் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் சீர்குலையும்.
நிதி மற்றும் நலன் சார்ந்த சீரான அணுகுமுறை:
இக்கல்லூரிகள் அரசின் மானிய உதவி (Grant-in-Aid) மூலம் இயங்குபவை என்பதை நாங்கள் அறிகிறோம். எனவே, அரசு எடுக்கும் எதிர்கால முடிவுகள் அரசின் நிதிநிலையோடு சேர்த்து, ஒப்பந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சமநிலையோடு அமைய வேண்டும். ஒப்பந்த பேராசிரியர்கள், ஒப்பந்த துணை, இணை பேராசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் மாதாந்திர ஊதியத்தைத் தாமதமின்றி வழங்க உரிய அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.கல்விப் பணி தடைபடாமல் இருக்க, ஒப்பந்த நீட்டிப்பை (Contract Renewal) காலதாமதமின்றி விரைந்து செய்ய வேண்டும்.
ஒப்பந்த ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பையும், நிறுவனங்களின் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்ய மனிதநேயமிக்கக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.