Times of Puducherry

புராஜெக்ட் ஜோராவர்: மஹிந்திராவை முந்திய டாடா - பாதுகாப்புத் துறையில் மெகா டீல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 6:33 PM

இந்திய ராணுவத்தின் புராஜெக்ட் ஜோராவர் திட்டத்தின் மூலம், முதன்முறையாக ஒரு போர் டேங்க் முழுமையாக தனியார் துறையால் கட்டப்பட உள்ளது. இது சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவனங்கள் தவிர, மிக உயர்ந்த மலைப் பகுதிகளிலும் இயங்கும் திறன் கொண்ட புதிய அர்மர்டு ஃபைட்டிங் வெஹிக்கிள்-இந்தியன் லைட் டேங்க் (AFV-ILT)-ஐ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் வர்த்தகப் புள்ளிகளை மதிப்பீடு செய்த மூன்று ஆண்டு தேர்வு செயல்முறைக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சகம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக, டாடா குழும நிறுவனம் 130 வாரங்களுக்குள் இரண்டு மாதிரி டேங்குகளை உருவாக்கி செயல் விளக்கம் அளிக்க வேண்டும்.

இத்திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேக் 1 (Make 1) கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இக்கொள்கை திட்ட வளர்ச்சிக்கு 70% அரசு நிதி உதவி வழங்கப்படும். இரண்டாவது குறைந்த ஏலதாரரான மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் (Mahindra Defence Systems) நிறுவனத்திற்கும் மாதிரி டேங்கை உருவாக்க அழைப்பு விடுக்கப்படும்.

கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் குறைந்த ஏலதாரராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், போட்டியாளர்களில் ஒருவர் தேர்வு செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது . இருப்பினும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு, அந்த எதிர்ப்புகள் செல்லுபடியாகாது எனக் கண்டறியப்பட்டது. இதனால், உற்பத்தி உத்தரவு வழங்கும் கட்டத்திற்கு இச்செயல்முறை நகர்ந்துள்ளது.

ஏற்கனவே ராணுவத்திற்கு டிரக்குகள் மற்றும் காலாட்படைப் போர் வாகனங்களை வழங்கியுள்ள டாடா நிறுவனத்திற்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகும். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி கோபுரம் மற்றும் சொந்தமாக உருவாக்கப்பட்ட லோய்டரிங் வெடிமருந்துகளுடன் இந்த டேங்கை டாடா வழங்க உள்ளதாக தெரிகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top