Times of Puducherry

புதுச்சேரி பல்கலைக்கழகம் ஐரோப்பிய நாடுகளுடன் முதல் மாநாடு நாளை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துவங்குகிறது சுற்றுலாத் துறை கல்வி மற்றும் தொழில்முறை ஆகியவற்றை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
6 Sep 2026 • 7:35 PM

இந்திய மற்றும் ஐரோப்பியக் கண்டங்களை ஒன்றிணைத்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு நடக்கிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியின் கீழ் இயங்கும் சுற்றுலா ஆய்வுகள் துறை (Department of Tourism Studies), ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பெறும் திட்டத்தின் கூட்டாளர் அமைப்புகளுடன் (லாட்வியா, போர்ச்சுகல் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களைச் சேர்ந்தவை) இணைந்து, 2026 செப்டம்பர் 7 முதல் 11 வரை புதுச்சேரியில் ஒரு சர்வதேச அறிவியல் மற்றும் செயல்முறை சார்ந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலாத் துறை கல்வி மற்றும் தொழில்முறை ஆகியவற்றை இந்த மாநாட்டில் இணைகின்றனர்.

இந்திய மற்றும் ஐரோப்பியக் கண்ணோட்டங்கள் என்ற கருப்பொருளைக் கொண்ட இம்மாநாடு நடக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை விவாதிக்க உள்ளனர், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் முன்னோடிகளை இந்த மாநாட்டில் ஒன்றாக இணைகின்றனர் இம்மாநாட்டின் தொடக்க விழா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் CCC வளாகத்தில், நாளை (திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2026) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு தலைமையில் நடைபெறவுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top