Times of Puducherry

நரேந்திர மோடியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தலைசுற்ற வைக்கும் பட்டியல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 6:32 PM

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அரசு நிர்வாகத்தில் நேர்மையும் ஊழலற்ற ஆட்சியும் நீடிக்கவும், தனியார்துறை திறமையாளர்களை அரசியலை நோக்கி ஈர்க்கவும் அமைச்சர்களுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள அரசியல் தலைவர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமரின் ஆண்டு வருமானம் ரூ.27 கோடியாக (3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) உயர்கிறது.

64 சதவீத உயர்வு – அக்டோபர் 15 முதல் அமல்

சிங்கப்பூரில் 2012-ல் பொதுமக்களின் எதிர்ப்பால் அமைச்சர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன்பின் 2017 மற்றும் 2023-ல் பரிசீலிக்கப்பட்டும் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சம்பளச் சீரமைப்பு வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிரதமரின் வருமானம்

தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு அடிப்படை சம்பளம் 2.2 மில்லியன் டாலரில் இருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்கிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 கோடியாக உயர்கிறது.

உயரும் சம்பளத்தை நன்கொடையாக தரும் லாரன்ஸ் வோங்

அமைச்சர்களின் சம்பள உயர்வு மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பள உயர்வை முழுமையாக அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்கப்போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களின் ஆண்டு சம்பளம் – ஓர் ஒப்பீடு

சிங்கப்பூர் பிரதமர் (லாரன்ஸ் வோங்): ரூ.27 கோடி

ஹாங்காங் தலைமை நிர்வாகி (ஜான் லீ): ரூ. 6.79 கோடி

சுவிட்சர்லாந்து அதிபர் (கை பெர்மெலின்) : ரூ.5.73 கோடி

அமெரிக்க அதிபர் (டொனால்டு டிரம்ப்): ரூ. 3.78 கோடி

பிரான்ஸ் பிரதமர் (ஆன்டி பர்ஹாம்) : ரூ. 2.18 கோடி

இந்தியப் பிரதமர் (நரேந்திர மோடி) : ரூ. 33.60 லட்சம்

உலகிலேயே மிக அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர்கள் பட்டியலின் முதலிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் தொடர்ந்து நீடிக்கிறார். இந்தியர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு பெருமளவில் இந்தியர்களே வசிக்கின்றன. மேலும், தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்ட மொடியாக உள்ளது.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா போன்ற இந்தியாவை பறைசாற்றும் பல இடங்கள் உள்ளன. இந்த நாட்டில் நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாது. 100 வருடம் குத்தகை போன்ற அடிப்படையில் தான் வீட்டை வாங்க முடியும். குத்தகை முடிந்ததும் வீட்டை அரசே எடுத்துக் கொள்ளும். பரப்பரளவு பிரச்சனை காரணமாக இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top