Times of Puducherry

ஒதியம்பட்டு நித்யா பேக்கேஜிங் தொழிற்சாலை அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் தலைமையில் குறை தீர்வு கூட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 7:54 PM
pf

அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று‌ ஒதியம்பட்டு நித்யா பேக்கேஜிங் தொழிற்சாலை அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடந்தது. சேதுராப்பட்டு அனைத்து தொழிற்சங்களின் தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனு கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறியிருப்பதாக:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில், கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதாமாதம் P.F தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. P.F. அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருகின்பதிவு செய்து வருகின்றனர்
P.F. உறுப்பினர்கள், பென்ஷன்தாரர்கள், கடன் கோரி மனு செய்தவர்கள். பலர் உரிய நேரத்தில P.F. தொகை கிடைப்பதில்லை இதனால் அவர்கள் நேரடியாக P.F. அலுவலகம் வந்து P.R.O-விடம் முறையிடுகின்றனர். P.R.O மூலம் அவரவர்களின் P.F. எண்ணுக்குரிய அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். அதன்பிறகு நியாயம் கிடைக்காமல் அலுவலகம் வருகின்ற தொழிற்சங்கத்தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் காலதாமதம் ஆகிறது.

P.F. உறுப்பினர்கள், ஆணையர் மண்டல ஆணையர் V. சதிஷ்குமாரின் யாரையும் சந்திக்க மறுக்கும் இந்த செயல் தவறானது. இதை
வன்மையாகக் கண்டிக்க தக்கதாகும். உள்ளே ஒரு லைட் மட்டும் எரிந்து கொண்டே இருக்கின்றது. உள்ளே என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. சட்டப்படி மத்திய அரசு அதிகாரி, மக்கள் வரிப்பணத்தில் மாதா மாதம் சம்பளம் பெறும் அதிகாரி பொதுமக்களை சந்திக்க மாட்டேன் சொல்வது தவறானதாகும். பொதுமக்களை, ஊழியர்களை நான் சந்திக்க மாட்டேன் என்று எந்த சட்டத்தின்படி, எந்த பிரிவின்படி கூறுகின்றார் என்பதை ஆணையர் தெளிவாக சொல்ல வேண்டும்.

பிரதி மாதம் 27-ம் தேதி நடைபெறும் குறை தீர்வு கூட்டம் குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிப்பதில்லை. செய்தித்தாள்களில் 5 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு இல்லை. இதில் ஆணையர் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றார்.
மண்டல ஆணையர் சதீஷ்குமார் செயல்பாடுகளில் பல்வேறு சந்தகங்கள் எழுகின்றது. இந்த ஆண்டு 2026, செப்டம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் மத்திய ஊழல் கண்காணிப்புஆணைய (CvC) அதிகாரிகள் P.F. அலுவலகத்தில் ஆணையரிடம் விசாரணை நடத்தினார்கள்.
3 நாட்களும் ஆணையர் அறையில் ஆணையரிடம் விசாரணை நடைபெற்றது.

3 நாட்கள் கடந்த பின்னர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) அதிகாரிகள் புதுடில்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதிலிருந்தே P.F. அலுவலகத்தில் ஊழல் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கு ஆணையரே முழு பொறுப்பாவார். 3 நாட்கள் நடைபெற்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரிகளின் விசாரணை குறித்து மண்டல ஆணையர் சதீஷ்குமார் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சதீஷ்குமார் அவர்களை சந்திக்க வேண்டும் குறைகளை அவரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்கும்போது அதிகாரிகள் மறுக்கின்றனர். மண்டல ஆணையர் யாரையும் சந்திப்பதில்லை வெளியிலிருந்து யார் வந்தாலும் சந்திப்பதில்லை. P.F. அலுவலகத்தில் பணிபரியும் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் சந்திப்பதில்லை என்று கூறுகின்றார்கள். அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களின் மனு குறித்த கோப்பு விபரங்களை பேச வேண்டும் என்று கூறினாலும் மண்டல ஆணையர் சந்திப்பதில்லை. கோப்பு மட்டுமே உள்ளே
சென்று வருகின்றது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top