Times of Puducherry

பரந்தூர் விமான நிலைய நிலத்தில் ரூ. 175 கோடியில் தொழிற்பூங்கா: அரசாணை வெளியீடு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 11:05 AM

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடத்தில் தமிழக அரசு 175 கோடி ரூபாய் மதிப்பிலான சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. பரந்தூரில் அமையவிருந்த விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் ரூ.175 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையின் 2வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை முந்தைய தி.மு.க அரசு தீவிரமாக முன்னெடுத்த நிலையில், அந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்தது. இந்நிலையில், பரந்தூர் அருகே மதுரமங்கலம் பகுதியில் தமிழக அரசு புதிய தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மதுரமங்கலத்தில் புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 175 கோடி ரூபாய் (Semiconductor) மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா தொடங்கப்பட உள்ளது.

இந்த தொழிற்பூங்கா தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்டிருந்தார். மதுரமங்கலத்தில் தொழிற்பூங்கா அமைத்து, செமிகண்டக்டர் உற்பத்தி சார்ந்த தொழில்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது மதுரமங்கலம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சென்னையின் 2வது விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அதே பகுதியில் செமிகண்டக்டர் தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்ட புதிய தொழிற்பூங்கா உருவாக இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top