Times of Puducherry
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது அவர்களிடம் இருந்து ஒரு கிலோ மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்
பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் தீபா தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர் அப்போது, விற்பனைக்காக 1.150 kg கஞ்சா வைத்திருந்த பழைய குற்றவாளியான பிரகாஷ் (28), த/பெ ரவிச்சந்திரன், 155, ராமமூர்த்தி தெரு, ராயபுரம், சென்னை, திருவரங்கன் (19), த/பெ பன்னீர்செல்வம், அரசூர் மெயின் ரோடு, புதுப்பேட்டை ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1.150 kg கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவின் மூலம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.