Times of Puducherry
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சந்தித்து பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ K.மோகன் அவர்கள் மனு அளித்தார் அதில்:
பண்ருட்டி பேருந்து நிலையம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மேலும் ஏற்கனவே கடை ஒதுக்கப்பட்ட நபர்களுக்கே மீண்டும் கடை வழங்க வேண்டும். பண்ருட்டி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு காய்ச்சலுக்கு ஆளாகி வருவதால் முன்னெச்சரிக்கை ஏற்படாக தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
தற்பொழுது மழைக்காலம் வர உள்ளதால் கெடிலம் ஆற்று பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் .
இம்பிளிமெண்ட் ஆப் வாட்டர் சப்ளை 24 இன்டு 7 திட்டத்தின் கீழ் பண்ருட்டி நகர பகுதியில் குழாய் அமைக்கும் பணியினால் பல்வேறு இடங்களில் சாலைகளை உடைத்ததனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது . மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.