Times of Puducherry

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மொத சுப்ரபாத தோமாலை பூஜை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 7:51 PM

புதுச்சேரி அடுத்த மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடீயில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருப்பதியில் நடைபெறுவது போன்று சுப்ரபாதம் ,தோமாலை, மற்றும் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் திரளாக வருகை தருமாறு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வங்கீபுரம் அனந்த பத்மநாப ஆச்சார்யார். புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில்,அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி கோவிலில், வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளை நடத்த பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 18-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை காலை 5.00 மணியிலிருந்து 7.30 மணி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரால் வழங்கப்பட்டு பஞ்சவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு திருமலையில் நடப்பது போன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும்திருமஞ்சனம் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் 6.00 மணி முதல் 7.30 மணி வரை ஹரிநாம சங்கீர்த்தனம், பகவத் கீதை ப்ரசங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார். புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகளுக்கு, வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் தலை வாழை இலையில் வடை பாயசத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top