Times of Puducherry

பசுமை அமைப்பு சார்பில் 12500 பனை விதைகள் மற்றும் 250 புளியங்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 9:39 PM
palm-tamridtree-planting

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வாக்கூர் கிராம இளைஞர்கள் பசுமை அமைப்பு சார்பில் 12500 பனை விதைகள் மற்றும் 250 புளியங்கன்றுகள் நடும் நிறைவு விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் அவர்கள் 27.09.26 காலை கலந்து கொண்டு நீர்வளத்துறை வாக்கூர் பெரிய ஏரி கரை க்கால் ஓரங்களில் நடவு பணியை முடித்து வைத்து நிகழ்ச்சியை வாழ்த்தி பேசினார். எல்நினோ பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக உள்ளதையும் நினைவு கூர்ந்து பேசினார். நிகழ்ச்சிக்கு வாக்குறு ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்துமதி புருசோத்தமன் முன்னிலை வகித்தார் மரக்கன்றுகள் ஏற்பாடு செய்து வரவேற்புரை திருவேங்கடம் நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை நந்தகோபாலகிருஷ்ணன் விக்கிரவாண்டி வட்டாட்சியர் மகாதேவன் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கபிலன் விழுப்புரம் வனச்சரகர் குப்புசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்திரன் சகிதா பானு ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் அறவாழி விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழிற்சங்க தலைவர் அம்மன் கருணாநிதி வனம் கார்த்திகேயன் தமிழ்நாடு சட்ட விழிப்புணர்வு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் அய்யனார் சிறுவள்ளிக்குப்பம் ஏபிஜே அப்துல் கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் உள்ளாட்சித் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பசுமை அமைப்பு கோகுல கிருஷ்ணன் நன்றி உரை நிகழ்த்தினார்.

பசுமை அமைப்பு சார்பில் 12500 பனை விதைகள் மற்றும் 250 புளியங்கன்றுகள் நடும் விழா
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top