Times of Puducherry
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா கலெக்டர் ஆதித்யா செந்தில் குமார் கடலூர் கோதண்டராமாபுரம், குறிஞ்சிப்பாடி வட்டம் பள்ளிநீரோடை, பண்ருட்டி வட்டம் மருங்கூர், விருத்தாசலம் வட்டம் மணவாளநல்லூர் மற்றும் எம்.அகரம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்துநேரில் பார்வையிட்டு டார்.கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகமாக சன்னரகம் எல்லையே பயிர் செய்கின்றனர் ஆனால் கூடிய விரைவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் அமுதா தெரிவித்தார்.
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், நெல் கொள்முதல் தொடர்பாக பின்பற்றப்படும் அனைத்து தரவுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க நடப்பு கே.எம்.எஸ் 2026-2027 ஆம் ஆண்டு குருவை பருவத்திற்கான நெல் கொள்முதல் செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இப்பருவத்திற்கு 199 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5,172.200 மெ.டன் சன்னரக நெல் மற்றும் 36,799.800 மெ.டன் பொதுரக நெல் ஆகக்கூடுதல் 41,972.000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 7,927 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகையாக ரூ.109.90 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2025-26ஆம் ஆண்டில் 748 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அவற்றின் மூலம் சன்னரகம் நெல் 2,53,777.960 மெ.டன் மற்றும் பொது ரகம் நெல் 3,12,432.920 மெ.டன் ஆகக் கூடுதல் 5,66,210.880 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 5,65,633.880 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, மீதம் 577.000 மெ.டன் நெல் தரையிருப்பில் உள்ளது. கடந்த ஆண்டு அதிக அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக இயக்கம் செய்யப்பட வேண்டியது நிலுவையில் உள்ளது. தற்போது அதனை இயக்கம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நடைமுறைகள், நெல் மூட்டைகளின் இருப்பு, எடை அளவீடு, கொள்முதல் குறித்த பதிவேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணிகளை உரிய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி விரைந்து மேற்கொள்ளவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகள் விளை நிலத்தின் பட்டா நகல் மற்றும் சிட்டா அடங்கல், ஆதார், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் நெல் கொள்முதல் செய்ய e-DPC மூலம் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதில் விவசாயிகளின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கி முறையாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கொள்முதல் செய்யவும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் நிலையம் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களின் விவரம், நெல் கொள்முதல் நிலையத்தின் வேலை நேரம் மற்றும் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் கூடிய தகவல் பலகை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 100 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார். எனவே அரசு நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.