Times of Puducherry

விளையாட்டு வீரர்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் உதவித்தொகை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
6 Sep 2026 • 3:47 PM

விளையாட்டு வீரர்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் உதவித்தொகை

8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஓஎன்ஜிசி சார்பில் 19 விளையாட்டுப் பிரிவுகளில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு ஓஎன்ஜிசி உதவி தொகையை இந்த ஆண்டு வழங்குகிறது ,இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 2026- 27 விளையாட்டுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 7.30 லட்சத்திற்கும் குறைவாக வாங்கும் பெற்றோர்களைக் கொண்டிருக்க வேண்டும் . விளையாட்டு மாணவர்கள் பதக்கம் வெல்லும் திறமை கொண்ட விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு, 2026-27 ஆண்டில் 19 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் மாதம் ரூபாய் 40,000 முதல் 2,70,000 வரையிலான 125 விளையாட்டு உதவித்தொகைகளை வழங்குவதற்காக ஒஎன்ஜிசி இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் ஒஎன்ஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sportsscholarship.ongc.co.in மூலம் செவ்வாய்க்கிழமை 08.09.2026 (காலை 11:00 மணி) முதல் 29.09.2026 (மாலை 04:00 மணி) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள திட்ட விவரங்கள் மற்றும் விதிமுறைகளைத் கவனமாக படித்துப் பார்த்து இணைப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது .

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top