Times of Puducherry
ஓமன் நாட்டில் பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை இங்கு காணலாம்.
ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in Foundry area or Manufacturing Industries) Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process Control) & CNC Operator, Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Maintenance (Exposure in Mechanical/Electrical Maintenance) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.44,000/- முதல் ரூ.54,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்குச் செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேல்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 11.10.2026 தேதிக்குள் அனுப்பவும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.