Times of Puducherry
செய்தியாளர்களிடம் அன்பழகன் அவர்கள் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர் தலைமையில் நடைபெறும் மக்கள் நலனுக்கான ஆட்சிக்கு நற்சான்று வழங்கும் தேர்தலாக தட்டஞ்சாவடி தேர்தலில் முடிவு இருக்க வேண்டும். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி என்பது முதல்வர் என் ஆர் அவர்களுடைய செல்லத் தொகுதி ஆகும்.அசோக்ஆனந்த் முதல்வர் என்.ஆர் அவர்களின் செல்லப்பிள்ளை ஆகும். நடைபெற இருக்கும் இந்த இடைத்தேர்தலில் மீண்டும் திரு அசோக் ஆனந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற எண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உள்ளது. அவரது எண்ணத்தை ஈடேற்ற வேண்டியது இந்த தொகுதி வாக்காளர்களின் கடமையாகும்.கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை தம்பி அசோக் ஆனந்த் அவர்களுக்கு ஜக்கு சின்னத்தில் நாம் வாக்களிக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தில் இடைத்தேர்தல் வரும்பொழுது ஆளும் அரசுக்கு சாதகமாக உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த தொகுதி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைவாகவும் காலத்தோடும் சென்றடையும். அதேபோன்று செய்யப்பட வேண்டிய பல்வேறு திட்டப் பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை பலமுறை நீங்கள் வேட்பாளராக சந்தித்திருக்கிறீர்கள். ஆனால் தம்பி அசோக்ஆனந்த் தவிர மற்ற வேட்பாளர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தும் உங்களுக்கு ஒரு குழப்பம் ஏற்படும்.கடந்த முறை ஒரு சின்னத்தில் நின்றவர்கள் இந்த முறை வேறு ஒரு சின்னத்தில் நிற்கின்றார்களே என்ற குழப்பம் நிச்சயமாக உங்களுக்கு ஏற்படும். தேர்தலுக்கு தேர்தல் சின்னம் மாறி நிற்பவர்களால் இந்த தொகுதியில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் நிச்சயமாக இருக்காது. எனவே தொடர்ந்து கட்சி மாறாமல் என் ஆர் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிடும் தம்பி அசோக்ஆனந்த் அவர்களுக்கு ஜக்கு சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் வேறு வழியில்லாமல் இங்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் நமது வேட்பாளர் குறித்து பல்வேறு பொய் செய்திகளை வாட்ஸ் அப், பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பி வருகின்றனர். இதிலிருந்து அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்கள் வேட்பாளருக்கு இல்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் இல்லாத காலத்திலும் தனது சொந்தப் பணத்தில் பல்வேறு கோவில்கள், சமூக சமுதாய அமைப்புகள், கல்விப் பயலும் மாணவ மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அவர சிகிச்சைகள் உள்ளிட்ட பல நற்காரியங்களுக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருபவர். எனவே இந்த இடைத்தேர்தலில் தம்பி அசோக்ஆனந்திற்கு நாம் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் செயலாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.