Times of Puducherry

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மூன்றாவது சுற்று கலந்தாய்வு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
10 Sep 2026 • 10:49 AM

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மூன்றாவது சுற்று கலந்தாய்வுக்கு வருகின்ற 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

புதுச்சேரி, நீட் அல்லாத இளநிலைபடிப்புகளில் 3-வது கட்ட கலந்தாய்வுக்குவிருப்பபாடங்களை வருகிற 12-ந் தேதிக்குள்

தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரிசென்டாக் ஒருங்கிணைப்பாளர் தயானந்த் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காலி இடங்கள் பட்டியல் புதுவை மாநிலத்தில் நீட்க மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவம் எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்பில் உள்ள அரசு, நிர்வாகம் மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களுக்கும், பி.வி.எஸ்.சி (கால்நடை மருத்துவம்) படிப்பில் உள்ள சுயநிதி மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஒதுக்கீட்டு பட்டியல் சென்டாக்இணையதளத்தில் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் இடம் கிடைத்தவர்கள் கடந்த 7-ந் தேதிக்குள் கல்லூரியில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் சென்டாக்ணைய தளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 2-ம் சுற்றுக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

3-வது கட்ட கலந்தாய்வு சென்டாக்கில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3-வது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது விருப்பங்களை வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்குள் சென்டாக் இணையதளம் வழியாக டேஷ்போர்ட்டில் உள் நுழைந்து தங்கள் விருப்ப பாடங்கள். கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். விருப்ப பாடங்களை தேர்வு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படாது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top