Times of Puducherry
புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் இலக்கிய திருவிழா நடந்தது. விழாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து பேசியதாவது:-
நலத்திட்டம், இலவசத் திட்டம் என்பதை வரையறுப்பது அவசியம். நலத்திட்டங்கள் நிச்சயமாக தேவை. ஒரு தரப்பினர் இலவசதிட்டத்தை அறிவிக்கும்போது மற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், தாங்களே அதைச்செய்யும்போது அது இலவசத்திட்டம்இல்லை என்று வாதாடுகிறார்கள்.போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலையில் இலவசத் தாக்கத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாநிலமோ அல்லது மத்திய அரசோ, வருவாய் ஆதாரங்களை ஒரே துறையை சார்ந்ததாக வைத்திருக்காமல் பல்வகைப்படுத்த வேண்டியது அவசியம். இந்தியாவைபொறுத்த வரை, பல்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதால் ஒட்டுமொத்தமாக ஒரு பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அமைப்பை கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும், வருவாய் ஆதாரங்களை பன்முகப்படுத்துவதும் எந்தவொரு நிதி அமைச்சருக்கும்மிகப்பெரிய சவாலான பணி. அதே சமயம், வரி ஏய்ப்பை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கடினமானவை. ஒரு இல்லத்தரசியின் வருமானம் திடீரென 5 மடங்கு அதிகரித்திருப்பதைக்கூட எளிதாகக் காணமுடிகிறது. ஒவ்வொருவரின் வருமானமும் 500 மடங்குபெருகட்டும் என்று நான் விரும்புகிறேன். இது குறித்து விளக்கமளிக்கவேண்டும். விளக்க முடியாவிட்டால் நாங்கள் கேள்வி கேட் போம். அதுதான் எங்கள்பணி. இது நிதி அமைச்சரின் பணி. யு.பி.ஐ. விவகாரம் வரியோ, கூடுதல் கட்டணமோ அல்ல. அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.