Times of Puducherry
வாடிக்கையாளர்களும், பி.எஃப். உறுப்பினர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) முக்கிய அறிவிப்புகள் மற்றும் சேவைகளை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், EPFO தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேனல் மூலம் பி.எஃப். சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இனி மத்திய அரசின் புதிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகளை வாட்ஸ் அப் செயலியிலேயே உடனுக்குடன் பெற முடியும்.
EPFO வாட்ஸ்அப் சேனலை பின்தொடர்வது எப்படி?
உங்களது கைப்பேசியில் வாட்ஸ் அப் செயலியைத் திறக்கவும்.
அதில் அப்டேட் பகுதிக்கு சென்று, சேனல்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தேடுதல் பட்டியில் EPFO என்று டைப் செய்து தேடவும்.
அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட (Green Tick) EPFO சேனலைத் தேர்ந்தெடுத்து ஃபாலோ என்பதைக் கிளிக் செய்யவும். அல்லது EPFO- வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க்/ க்யூஆர் கோட் மூலமாகவும் இணையலாம்.
இந்த சேனலில் என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?
பி.எஃப். சேமிப்பு மற்றும் ஓய்வூதியம் (Pension) தொடர்பான புதிய விதிகளின் அறிவிப்புகள்.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய கொள்கை மாற்றங்கள் மற்றும் சேவைப் புதுப்பிப்புகள்.
EPFO வழங்கிவரும் பல்வேறு வசதிகள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்.
இணையதளங்களுக்குச் சென்று தேட வேண்டிய அவசியமின்றி நேரடி தகவல்கள்.
பி.எஃப். பேலன்ஸ் பார்க்க முடியுமா?
இந்த வாட்ஸ் அப் சேனல் என்பது பொதுவான தகவல்களை பகிரும் ஊடகம் மட்டுமே.
கணக்கு இருப்பு (Balance Check)
இந்த சேனலைப் பின்தொடர்வதன் மூலம் உங்களது தனிப்பட்ட பி.எஃப். கணக்கு இருப்பு, கிளைம் ஸ்டேட்டஸ் (Claim Status) போன்றவற்றை நேரடியாக பார்க்க முடியாது.
அதிகாரப்பூர்வ தளங்கள்
உங்களது தனிப்பட்ட கணக்கு விவரங்களை அறிய வழக்கம்போல EPFO Member Portal அல்லது அரசின் UMANG செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைன் மோசடி எச்சரிக்கை
EPFO பெயரில் வரும் போலி வாட்ஸ் அப் கணக்குகள் குறித்து உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும். EPFO தனது உறுப்பினர்களிடம் ஒருபோதும் தொலைபேசி, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் மூலமாகத் தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது.
யாருடனும் பகிரக்கூடாத ரகசிய தகவல்கள்
UAN எண் & பாஸ்வேர்டு
ஆதார் கார்டு விவரங்கள்
பான் கார்டு & வங்கி கணக்கு விவரங்கள்
ஓடிபி எண்கள்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.