Times of Puducherry
நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில், கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மக்கள் மருத்துவர் டாக்டர் விக்னேஸ்வரன், கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவிகளின் கல்விப் பயணத்திற்கு உதவும் வகையில் வழங்கப்பட்ட இம்மிதிவண்டிகள், அவர்களின் பள்ளி வருகைக்கும் கல்வி தொடர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.