Times of Puducherry

'என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்': தேர்தல் ஆணையத்திற்கு நாராயணசாமி வலியுறுத்தல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 10:25 PM
narayanasamy-against-nr-candidate

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்திற்க்கு சபாநாயகர் அன்பழகன் பிரச்சாரம் செய்வதால், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தேர்தல் போட்டியிட தகுதி இல்லாதவர் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாநாயகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இடம்பெறவில்லை என சபாநாயகர் அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மாநிலத்தில் ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டலோ அல்லது நியமிக்கப்பட்டாலோ அவர் சபாநாயகராக செயல்பட முழு அதிகாரமும் உண்டு இதில் தற்காலிகம்,நிரந்தரம் என்பதெல்லாம் இல்லை என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் என்பவர் அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு பார்க்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும், ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சபாநாயகர் என்பவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் சபாநாயகர் அன்பழகன் தேர்தல் பிரச்சாரம் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்கு மீரிய செயலாகும், எனவே என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அன்பழகன். தமிழ்நாட்டில் சபாநாயகராக இருந்த ராஜாராம் திமுகவைச் சேர்ந்த தமிழ் குடிமகன், மதியழகன், பி.ஹெச் பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, கடந்த ஆட்சியில் இருந்த அப்பாவு, உள்ளிட்ட சபாநாயகர்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் சபாநாயகர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை நீதிமன்றம் வரை சென்று தான் அதிகாரம் அனைவருக்கும் உண்டு என்று நிரூபித்தவர் நாராயணசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top