Times of Puducherry
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், சொத்து பிரச்சினை காரணமாக தனது உடன்பிறந்த சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கு விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி சந்திரசேகர். தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சொத்து பிரச்சினை காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் மரிய வில்சன் கொலை மிரட்டல் விடுத்த காணொளி தேர்தல் சமயத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல், கூட்டுச் சதி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்வதற்காக ஆஜராக வேண்டுமென புதுச்சேரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் சமரச மன்றம் மூலம் இரண்டு தரப்பினரும் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த நிலையில், சமரச முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என்றும், 4-ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் கட்டாயம் கொடுக்கப்படும் என நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதி சந்திரசேகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். மேலும் இன்று நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரரை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடங்களுக்கு வெளியிட்ட மரிய வில்சனின் சகோதரர் மனைவி கேரளின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசேகர் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.