Times of Puducherry

துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 3:36 PM
mercury transit in libra september 26 2026 brings luck to 4 zodiac signs

Mercury Transit in Libra 2026: செப்டம்பர் 26, 2026 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்குள் பெயர்ச்சியடைய இருக்கிறார். இது நான்கு ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தையும், புதிய வாய்ப்பையும் வழங்க இருக்கிறது.

புதன் பெயர்ச்சி 2026

புதன் பகவான் செப்டம்பர் 26, 2026 மதியம் 12:41 மணியளவில் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அறிவு, தகவல் தொடர்பு, வணிகம், நிதிநிலைமை ஆகியவற்றை ஆளும் கிரகமான புதனின் இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்கு புதிய தொழில் வாய்ப்புகள், வேலை மாற்றங்கள், நிதி வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மிதுனம்

புதனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான தொழில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும் காலம் நெருங்கியுள்ளது. பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். தொழில் செய்து வருபவர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இருப்பினும் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டியதும், நிதி திட்டமிடலும் அவசியம்.

துலாம்

புதன் கிரகம் துலாம் ராசியில் பிரவேசிப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்க இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் புதிய தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்புக்கள் வந்து சேரலாம். தொழில் முனைவோர்கள் வணிக வளர்ச்சிக்காக புதிய தொடர்புகளைப் பெறலாம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவுகளுக்கும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் ஆசி உங்கள் வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்திற்கான வழியைக்காட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றத்தையும், புதிய பொறுப்புகளையும் எதிர்பார்க்கலாம். பணியில் இருப்பவர்கள் உங்களை திறமைகளை வழிகாட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் தொழிலில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இருப்பினும் பெரிய நிதி முதலீடுகளை செய்வதற்கு முன்னர் அனைத்து அபாயங்களையும் கவனமாக மதிப்பிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி தொழில் முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புகளையும் குறிக்கிறது. உங்கள் தொழிலில் லாபகரமான வழிகள் திறக்கப்படும். பணி தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். நீண்ட கால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். இருப்பினும் அவசரமான, உணர்ச்சிப்பட்ட முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். தனிப்பட்ட வரவு செலவு திட்டங்களை விவேகத்துடன் நிர்வகிக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top