Times of Puducherry

கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி.! கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 2:42 PM
Mars Transit in Cancer 3 zodiac signs becomes millionaire according to astrology

Mars Transit in Cancer: செப்டம்பர் 18, 2026 அன்று செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கடக ராசி செவ்வாய் பகவானின் நீச்ச வீடாகும். ஜோதிட கணக்குகளின்படி செவ்வாய் பகவானின் கடக ராசி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களையும், சாதகமான மாற்றங்களையும் கொண்டு வரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினர் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். சொத்து, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியங்கள் கிடைக்கும். நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறு கவனமும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் நல்லது.

கடகம்

கடக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர இருக்கிறார். இதனால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தேங்கி கிடந்த பணிகள் மீண்டும் வேகம் எடுக்கும். அடுத்த 45 நாட்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உறவுகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்லிணக்கம் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வதும், நிதானத்தை கடைப்பிடிப்பதும் சிறந்தது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான மாற்றங்களை அளிக்கும். எடுக்கும் காரியங்களில் புதிய வேகம் பிறக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற சூழல் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சேமிப்பு அதிகரிக்கும். நிதி சார்ந்த பிரச்சினைகளில் நிவாரணம் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top