Times of Puducherry
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, கடலூர் புராதான சின்னமாகிய மஞ்சைநகர் மைதானத்தை வணிக கட்டிடங்கள் கட்டாமல் அதே பொலிவுடன் கடலூரின் பாரம்பரிய சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மஞ்சை நகர் மைதானம் பாரம்பரியம்மிக்க கடலூரின் வரலாற்றுச் சின்னம், அதை இரு புறமும் வணிகக்கட்டிடங்கள் மதில் சுவர் போல் கட்டி மைதானத்தில் நடப்பவற்றை மற்றவர்கள்பார்க்க முடியாத அளவுக்கு மறைப்பது, கடலூர் மக்களுக்கு சொல்ல முடியாத துயரத்தைஏற்படுத்துகிறது.
மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 13 ஏக்கர் அண்ணா ஸ்டேடியம் கட்ட ஒதுக்கப்பட்ட பிறகு மீதம் உள்ள 17 ஏக்கர், சுமார் அதில் 4 ஏக்கர் மணிமண்டப நூலகம், பாபு கலையரங்க விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 13 ஏக்கரில் உள்ள மைதானத்தில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கடைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்தப்பட்ட வேண்டும்.
மைதானம் கம்பிகளால் மக்கள் பார்வையில் இருக்கும்படி மாற்றப்பட வேண்டும். நான்கு புறமும் மதில்சுவர்போல் வணிக வளாக கட்டிடம் கட்டுவதால் உள்புறம் மைதானம் சமூக விரோதிகளின் கூடாராமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்லும் சாலையில் வணிக வளாக கட்டிடம் கட்டும் பணியினை உடனே தடுத்து நிறுத்த நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
பாதாள சாக்கடை இணைப்பிற்கும், குடிநீர் இணைப்பிற்கும் வைப்புத் தொகை கட்டாமல் இணைப்பு பெறாத பல பேர்களுக்கு கட்டணம் செலுத்த சொல்லி மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வருவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது உடனடியாக களையப்படவேண்டும். டெங்கு பரவும் சூழ்நிலையில் எடுக்கப்படாத குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு உற்பத்தி என்பது தங்குதடையின்றி நடந்து வருகிறது. இது உடனடியாக களையப்பட்டு மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஊராட்சி பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் சில பகுதிகளில் பன்றி, நாய் மற்றும் மாடுகளின் தொல்லை தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. அதனை உடனடியாக அதிக பணியாளர்களை நியமித்து இதனை சரிசெய்து மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநகராட்சியில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீருடன் கலந்து மஞ்சள் நிறமாக வரும் அவல நிலையில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக பழைய குடிநீர் குழாய்களேஆகும். அவற்றை மாற்றி அமைத்தும், பாதாள சாக்கடை குழிகள் பல இடங்களில் வழிந்து சாலை மற்றும் தெருக்களில் ஓடுவதை நாம் தடுத்து நிறுத்தியும், மக்களின் சுகாதாரத்தை முதன்மை பணியாக கொண்டு மாநகராட்சி இதனை செய்திட வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் வெயில் காலங்களில் மக்கள் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை என்பது உடனடியாக அமைக்கப்பட்டு அதில் கழிவறை வசதியுடன் கட்டித் தர வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.