Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மக்களுக்கு செய்த பணிகளின் அடிப்படையிலேயே தற்போது தேர்தலில் போட்டியிடுவதாகவும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அசோக் ஆனந்த், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி அல்ல. மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான நேரங்களில் என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளேன். மக்களின் சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளிலும் என்னால் முடிந்த அளவிற்கு துணையாக இருந்துள்ளேன்.
நான் செய்த பணிகளை மக்கள் நேரடியாக பார்த்திருக்கிறார்கள். அந்த மக்களின் அன்பும், ஆதரவும்தான் எனது மிகப்பெரிய பலம். அதனால் தான் ‘மக்களே என் பலம்’ என்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். மக்களுக்கு நல்லது செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கையோடும், இனியும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னிடம் தெரிவிக்கும் கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முன்னெடுத்து, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அசோக் ஆனந்த் கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.