Times of Puducherry

மகர ராசியில் ராகு பெயர்ச்சி.! ஜூன் 2028 வரை 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 1:13 PM

Rahu Peyarchi 2026: விரைவில் ராகு பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக மாறும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

ராகு பெயர்ச்சி 2026

வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் எப்போதும் பின்னோக்கி நிலையிலேயே நகர்கின்றனர். பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 25, 2026 அன்று ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். ஜூன் 2028 வரை அவர் மகர ராசியிலேயே நிலைத்திருப்பார். இதன் காரணமாக ஐந்து ராசிக்காரர்களுக்கு திடீர் மாற்றங்கள், எதிர்பாராத செல்வ செழிப்பு கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

மேஷம்

ராகு பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியாவது மேஷ ராசிக்கு ராஜயோகத்தைப் போன்ற பலன்களைத் தரும். மேஷ ராசியினர் மேற்கொள்ளும் முயற்சிகள் வேகம் பெறும். பல ஆண்டுகளாக நின்று போன வேலைகள் மீண்டும் வேகம் எடுக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய வேலை அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சிறப்பான காலகட்டத்தை உருவாக்கும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். யாராலும் தீங்கு விளைவிக்க முடியாத நிலைமை உருவாகும். பழைய கடன்களை அடைத்து, மன நிம்மதி பெறுவீர்கள். தேவையான நேரத்தில் நிதி உதவி கிடைக்கும். தீர்க்க முடியாத சட்டப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கலாம்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் ராகுவின் பெயர்ச்சியால் பெரிய பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழுப்பும் அதிகரிக்கும். வீட்டின் வசதிகள் உயரும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் காலம் கைகூடும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிகரமானதாக மாறும். வேலையில் இருப்பவர்கள் உயர் பதவியையும், புகழையும் அடைவீர்கள். வியாபாரத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்கும்.

மீனம்

ராகு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகள் தற்போது லாபம் தரத் தொடங்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் ஆதரவுடன் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்டுவீர்கள். பல வழிகளில் இருந்து வருமானம் பெருகும். அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும் உங்கள் பக்கம் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top