Times of Puducherry

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்டிரல் டு மதுரை சிறப்பு ரயில்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 10:43 AM

சென்னை சென்ட்ரல்-மதுரை செப். 16 மாலை 4:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06153), மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் செப்.17 மதியம் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06154), மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது.

திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் (ரயில் 06154 மட்டும்) ஸ்டேஷன்களில் நின்று செல்லும். 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

தாம்பரம் – மதுரை செப். 16 இரவு 9:40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06157), மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் செப்.17 இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06158), மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்கிறது.

திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்லும். ஒரு 'ஏசி' முதல் வகுப்புடன் கூடிய 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 13 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை பீச் – மானாமதுரை 'மெமு' செப். 16 காலை 10:45 மணிக்கு சென்னை பீச்ஸ்டேஷனில் இருந்து புறப்படும் 12 பெட்டிகள் கொண்டமுன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயில் (06161), அன்றிரவு 11:30 மணிக்கு மானாமதுரை செல்கிறது. மறுமார்க்கத்தில் செப்.17 மதியம் 12:00 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் (06162), அன்றிரவு 11:45 மணிக்கு சென்னை பீச் செல்கிறது.

மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top