Times of Puducherry
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
நகல் பரிசோதகர் (Examiner), நகல் வாசிப்பாளர் (Reader), இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை பணியாளர் (Junior & Senior Bailiff), கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), ஓட்டுநர் (Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பகுதி A (தமிழ் மொழித் தகுதித் தேர்வு): 50 வினாக்கள் (50 மதிப்பெண்கள்). இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.
பகுதி B (பொது அறிவு & கணிதம்): 100 வினாக்கள் (100 மதிப்பெண்கள்) கொண்ட தேர்வு நடத்தப்படும். தேர்வின் மொத்த கால அளவு 2.30 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 550.
எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mhc.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.