Times of Puducherry

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 11:54 AM

திண்டிவனம் அருகே பேராவூர் கிராமத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு கண்டறியப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பேராவூர் சிவன் கோவில் சுற்றுச்சுவருக்குவெளியே, 14 வரிகளில் அமைந்த கல்வெட்டு காணப்படுகிறது. விழுப்புரம் அதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் வாசித்தார். சுபஸ்ரீபூமியும் திருமதுவும் புணர என தொடங்கும் இக்கல்வெட்டின் காலம், முதலாம் குலோத்துங்க சோழனின் 3வது ஆட்சி காலமாகும். (கி.பி.1073) திருவிணீச்சுரம் உடைய பேராவூரில்,மகாதேவர் கோவில்கள் தானமாக கொடுக்க, விளக்கெரிக்க 90 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தானத்தை பெருமூக்கில் நாட்டு நன்மூக்கிலை சேர்ந்த வெள்ளாளன் சேனாவரையன் கோதுகுல வனந்தை வில்லவன் பல்லவரையன் என்பவர் வழங்கி இருக்கிறார். இதில் குறிப்பிட்டுள்ள பெருமூக்கில் என்பது தற்போது பெருமுக்கல் என்றும், நன்மூக்கில் என்பது நல்முக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், 953 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமம் பேரயூர் என்று அழைக்கப்பட்டிருந்தது . தற்போது இப்பெயர் பேராவூர் என மருவியுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், ஒய்மா நாட்டிற்குட்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்த பேரயூர் நாடும் இருந்திருக்கிறது. இந்த அரிய தகவல்களை சொல்லும் இந்தக் கல்வெட்டினை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். பேராவூர் கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கி.பி.89 ஆம் நூற்றாண்டு கொற்றவை, தவ்வைச் சிற்பங்களும் காணப்படுகின்றன என வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறினார். இந்த ஆய்வின் போது, சினிமா இயக்குனர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, வழக்கறிஞர் சுரேஷ் கார்த்திக்,

உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top