Times of Puducherry

2 கிலோ கஞ்சா கடத்தல்: இருவரை வளைத்த போலீஸ்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 6:51 PM
kanja-thiruvannamalai

காவல் ஆய்வாளர் திரு.பார்த்தசாரதி மற்றும் காவலர்கள் தலைமையில் அவலூர்பேட்டை -டு- சேத்பட் சாலை கூட்டு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டதில் அவ்வழியாக வந்த நபரை சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து அவலூர்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் :

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா பூதமங்கலம் மன்னம்பட்டி மதுரா கொட்டாய் காரன் புரவடையை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் அருண் வயது 26 மற்றும் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வெங்கடேஸ்வரன் 25 ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ 15 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top