Times of Puducherry

“காசநோய் இல்லாத இந்தியா” (TB-Mukt Bharat) மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியா @2047” (Viksit Bharat @2047)

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 7:10 PM
jipmer-tb

புதுச்சேரி ஜிப்மர் சார்பில் Policy Resilience Foundation அமைப்பின் காசநோய்க்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து உணர்திறன் பரிசோதனை தொடர்பான மாநாடு நடந்தது . தேசிய மாநாடு மற்றும் கொள்கை கலந்துரையாடல் மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில் மருத்துவர்கள், மரபணு அறிவியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், காசநோய் ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், வளர்ச்சி கூட்டாளிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

காசநோய் மருந்து எதிர்ப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், நோயறிதலில் ஏற்படும் தாமதத்தைக் குறைத்தல் மற்றும் துல்லியமான சிகிச்சையை விரைவாக வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக பேசப்பட்டன. நோயாளிகளுக்கும் உரிய நேரத்தில் மருந்து உணர்திறன் பரிசோதனை கிடைப்பதை உறுதி செய்தல், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) தற்போதைய நோயறிதல் நடைமுறைகளுடன் tNGS தொழில்நுட்பத்தை உரிய முறையில் ஒருங்கிணைத்தல், ஆய்வகக் கட்டமைப்பு மற்றும் தர உறுதிப்பாட்டை வலுப்படுத்துதல், மரபணு பரிசோதனை முடிவுகளை மருத்துவ ரீதியாக சரியாகப் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்துதல், மாதிரி சேகரிப்பு மற்றும் பரிந்துரை வலையமைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குதல், பரிசோதனை முதல் சிகிச்சை மாற்றம் வரை ஆகும் காலதாமதத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

“காசநோய் இல்லாத இந்தியா” (TB-Mukt Bharat) மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியா @2047” (Viksit Bharat @2047)

மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றாக,

UDST என்பது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படக் கூடாது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை முழுமையான தொடர்ச்சியான செயல்முறை உறுதி செய்யப்பட வேண்டும் . அதன்படி, உரிய மாதிரி தாமதமின்றி சேகரிக்கப்படுதல், மருந்து எதிர்ப்புத் தன்மை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறியப்படுதல், பரிசோதனை முடிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவைச் சென்றடைதல், அதனடிப்படையில் உரிய சிகிச்சை உடனடியாகத் தொடங்க வேண்டும் நோயாளியின் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு முறையாகப் பதிவு செய்து புதுச்சேரி அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை பகுதிகளை உள்ளடக்கிய முன்னோடிச் செயலாக்கத் திட்டம் ஒன்றை உரிய மத்திய மற்றும் மாநில அரசுத் துறை அனுமதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கலாம் என மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் tNGS தொழில்நுட்பத்தின் நோயறிதல் துல்லியம், பரிசோதனை முடிவு கிடைக்கும் காலம், செலவு, ஆய்வகத் திறன், மருத்துவப் பயன்பாடு மற்றும் சிகிச்சை முடிவுகளை விரைவாக மேற்கொள்வதில் அதன் தாக்கம் ஆகியவை மதிப்பிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அணுகுமுறை, ஏற்கனவே செயல்பட்டு வரும் NTEP அமைப்புகளுக்கு துணையாக அமையுமே ததவிர, தனி இணை அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்காது.

மாநாட்டில் இருந்து வெளிப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், காலக்கெடுவுடன் கூடிய UDST செயலாக்கக் கட்டமைப்பை உருவாக்குதல், பரிசோதனையிலிருந்து உரிய சிகிச்சை தொடங்கும் வரை ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்குதல், tNGS தொழில்நுட்பத்தின் செயல்பாட்டு சாத்தியம் மற்றும் செலவு-செயல்திறனை மதிப்பிடுதல், மரபணு பரிசோதனை முடிவுகளைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வக மற்றும் மருத்துவத் திறன்களை வலுப்படுத்துதல், பல்துறை பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குதல், Ni-kshay தளத்தில் உரிய குறியீடுகளை ஒருங்கிணைத்தல், உள்நாட்டு நோயறிதல் மற்றும் தரவு சார்ந்த தொழில்நுட்பப் புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தர உறுதி மற்றும் தரவு நிர்வாகப் பாதுகாப்பு முறைகளை உருவாக்குதல் மற்றும் நிலையான நிதி மற்றும் செயலாக்க வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை இடம்பெற்றன. தொழில்நுட்ப ரீதியான ஆய்வுக்குப் பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு, உரிய அரசு அதிகாரிகளின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

காசநோய் கட்டுப்பாட்டில் புதுச்சேரியின் தற்போதைய வலுவான அடித்தளத்தையும் மாநாடு எடுத்துக்காட்டியது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் காசநோய் பாதிப்பு 59 சதவீதம் குறைந்துள்ளதுடன், காசநோய் பரிசோதனைகள் 136 சதவீதம் அதிகரித்துள்ளன. புதுச்சேரியில் 7 காசநோய் பிரிவுகளும் 28 நோயறிதல் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசு மார்பு நோய்கள் மருத்துவமனையில் உள்ள இடைநிலை குறிப்பு ஆய்வகத்தில் (Intermediate Reference Laboratory) மூலக்கூறு பரிசோதனை மற்றும் மரபணு வரிசைப்படுத்தல் வசதிகள் உள்ளதுடன், ஆண்டுக்கு 1.2 லட்சம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக உள்ளது. இந்தக் கட்டமைப்புகளுடன் JIPMER-இன் விரிவான மருத்துவச் சேவை, பல்துறை நிபுணத்துவம் மற்றும் ஆராய்ச்சித் திறன்கள் இணைவதன் மூலம், தென்னிந்தியாவில் மேம்பட்ட காசநோய் நோயறிதல் மற்றும் செயலாக்க ஆராய்ச்சிக்கான முக்கிய மையமாக புதுச்சேரி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக மாநாட்டில் குறிப்பிடப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தேசிய மாநாடு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை வலுப்படுத்துதல், அனைத்து நோயாளிகளுக்கும் உரிய நேரத்தில் UDST பரிசோதனை கிடைப்பதை விரிவுபடுத்துதல், புதிய மரபணு அடிப்படையிலான நோயறிதல் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் மதிப்பீடு செய்தல் மற்றும் மருந்து எதிர்ப்பை தாமதமாகக் கண்டறிவதால் ஏற்படக்கூடிய தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிறைவடைந்தது. இந்த முயற்சிகள் 2030ஆம் ஆண்டுக்குள் “காசநோய் இல்லாத இந்தியா” (TB-Mukt Bharat) மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியா @2047” (Viksit Bharat @2047) என்ற தேசிய இலக்குகளுடன் இணைந்துள்ளன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top