Times of Puducherry

ஜிப்மர் வளாகத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 6:38 PM
jipmer-procession-clean india

ஜிப்மர் வளாகத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பேரணியை ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி கொடியசைத்து தொடங்கி
வைத்தார். ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், மூத்த அலுவலர்கள் மற்றும் செவிலியர் குழுவினரும் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவர்கள் தூய்மை, தனிநபர் சுகாதாரம், டெங்கு தடுப்பு மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உடனிருப்போர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சிறந்த தூய்மை மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைப்பதே இந்தப் பேரணியின் நோக்கமாகும்.

ஜிப்மர் தன்னார்வலர்கள் ரயில் நிலைய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதில் அனைவருக்கும் உள்ள கூட்டுப்பொறுப்பை வலியுறுத்தப்பட உள்ளது. தூய்மை இந்தியா சேவை பிரச்சாரம் 2 அக்டோபர் 2026 அன்று ஜிப்மர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுடன் நிறைவடைய உள்ளது.

ஜிப்மர் வளாகத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான வளாகத்தை உருவாக்குவதில்
ஜிப்மர்-ன் உறுதிப்பாடு மேலும் வலியுறுத்தப்படுகிறது. பிரச்சாரத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் நடவடிக்கைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் ஜிப்மர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top