Times of Puducherry
புதுச்சேரி, ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு வருகின்ற 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு உள்ளது. இங்கு பெண்கள்-85,ஆண்கள்-9 என 94இடங்கள்,பி.எஸ்சி. அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளில் 97 இடங்கள் என மொத்தமாக 191 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான(2026-27) பி.எஸ்சி. நர்சிங் மற்றும் பி.எஸ்சி.அலைடுஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் இணையதளத்தில் https://academic.jipmer.edu.in/bsc/admission/ விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்களின்பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 26-ந்தேதி தொடங்கும்.மேலும் அடுத்த மாதம் 30-ந் தேதி வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.