Times of Puducherry

இரத்த மாற்று மருத்துவக் கண்காட்சி மற்றும் இரத்த தான விழிப்புணர்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Sep 2026 • 7:15 PM
jipmer-blood infusion-donation-awareness

ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், இரத்தமாற்று மருத்துவத் துறைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் பி. அபிஷேக் முன்னிலையில் இன்று இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இரத்தத்தின் அறிவியல், இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் தானமாக வழங்கப்படும் இரத்தம் நோயாளியைச் சென்றடையும் செயல்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

இரத்த மாற்று மருத்துவக் கண்காட்சி மற்றும் இரத்த தான விழிப்புணர்வு

கண்காட்சியில் செயல்விளக்க மாதிரிகள், நேரடி விளக்கங்கள் மற்றும் கல்வி சார்ந்த காட்சிப்படுத்தல்கள் மூலம் பல்வேறு இரத்த வகைகள், இரத்தக் கூறுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரத்த தானம் செய்யப்பட்ட பின்னர், அந்த இரத்தம் எவ்வாறு பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு இரத்தக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, தேவையான நோயாளிகளுக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம். மருத்துவத் துறையில் இரத்தத்தின் முக்கியத்துவத்தையும், தன்னார்வ இரத்த தானம் மூலம் உயிர்களைக் காப்பதில் பொதுமக்களின் பங்களிப்பையும் இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மூலம் இரத்த தானம் இரத்த மாற்று மருத்துவம் குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதுடன், இளம் தலைமுறையினரிடையே இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்வதும் நோக்கமாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top