Times of Puducherry

ரயிலில் லோயர் பெர்த் வாங்குவது எப்படி? ஐ.ஆர்.சி.டி.சி-யின் இந்த ரகசிய ஆப்ஷன்களை மிஸ் பண்ணாதீங்க!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 3:15 PM

வெளியூர் செல்பவர்களின் போக்குவரத்து தேர்வில் ரயில் தான் எப்போதும் முதலில் இருக்கும். இந்திய ரயில்வே, ஒவ்வொரு ரயிலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லோயர் பெர்த்களை மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்காக தானாகவே ஒதுக்குகிறது.

ஸ்லீப்பர் வகுப்பு: ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோயர் பெர்த்கள் வரை மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

3-ஆம் வகுப்பு ஏசி : ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 லோயர் பெர்த்கள்.

2-ஆம் வகுப்பு ஏசி : ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 லோயர் பெர்த்கள்.

ஒருவர் தனியாகவோ அல்லது இரண்டு மூத்த குடிமக்கள் சேர்ந்து பயணம் செய்யும்போது மட்டுமே இந்த ஒதுக்கீடு தானாகப் பொருந்தும். குடும்பமாக பலருடன் புக் செய்யும்போது இந்த முன்னுரிமை கிடைக்காமல் போகலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி முன்பதிவின் போது பின்பற்ற வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்

ஆன்லைனில் புக் செய்யும்போது ரிசர்வேஷன் சாய்ஸ் என்பதில் சீனியர் சிட்டிசன் கோட்டா என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (இதற்கு பயணி 60 வயதை அடைந்திருக்க வேண்டும்).

தனியாக முன்பதிவு செய்தல்

குடும்பத்துடன் 4-5 பேருக்கு ஒரே சீட்டில் புக் செய்வதை தவிர்த்து, வயதானவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு டிக்கெட் புக் செய்தால் லோயர் பெர்த் கிடைக்க 90% வாய்ப்புள்ளது.

சாய்ஸ் ஆஃப் பெர்த் பயன்படுத்துதல்

இருக்கைத் தேர்வில் 'லேயர்' என்பதைத் தேர்வு செய்வதோடு, குறைந்தபட்சம் ஒரு கீழ் படுக்கையாவது ஒதுக்கப்பட்டால் மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் 'Book only if at least one lower berth is allotted' அல்லது அனைத்துப் படுக்கைகளும் ஒரே பெட்டியில் ஒதுக்கப்பட்டால் மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் 'Book only if all berths are allotted in the same coach' என்ற நிபந்தனையைத் தேர்வு செய்யலாம்.

120 நாட்களுக்கு முன்பே திட்டமிடுதல்

முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே (ARP – Advance Reservation Period) புக் செய்தால், லோயர் பெர்த் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

மாற்றுத்திறனாளி / கர்ப்பிணிப் பெண்கள் ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சான்றிதழ் விவரங்களை உள்ளிட்டு லோயர் பெர்த் பெற தனி ஒதுக்கீடு வசதி உள்ளது.

டிக்கெட் புக் செய்த பிறகும் லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

நீங்கள் டிக்கெட் புக் செய்த பிறகும் லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்றால் மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தால், ரயில் புறப்பட்டவுடன் டி.டி.இ-யை சந்திக்கவும். யாராவது பயணம் செய்யாமல் லோயர் பெர்த் காலியாக இருந்தால், அதை மூத்த குடிமக்களுக்கு மாற்றிக் கொடுக்க டி.டி.இ -க்கு அதிகாரம் உள்ளது.

சக பயணிகளிடம் பேசுவது

அப்பர் பெர்த் ஏறுவது கடினம் என்பதை எடுத்துக்கூறி, லோயர் பெர்த் வைத்திருக்கும் இளைஞர்கள் அல்லது ஆரோக்கியமான பயணிகளிடம் இருக்கையை பரஸ்பரம் மாற்றிக் கொள்ளக் கேட்கலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top