Times of Puducherry

சி.எஸ்.கே புதிய பயிற்சியாளர்: ஜாகீர் கான் நியமனம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
22 Sep 2026 • 9:51 AM
IPL Cricket 2027 Zaheer Khan Join CSK As A Head Coach

ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளமிங் 2026 சீசனுக்கு பிறகு பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து க்ரிக்பஸ் இணையத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி பொதுவாக ஐ.பி.எல். போட்டிகள் முடிந்தவுடன், சென்னை அணியில் விரிவான ஆய்வுகள், நீண்ட விவாதங்கள், பெரிய விமர்சனங்கள் எதுவும் இருக்காது என்று வீரர்கள் சொல்கிறார்கள். அதேபோல, அதிகப்படியான கொண்டாட்டங்களோ அதிகப்படியான மகிழ்ச்சியே கூட இருக்காது. போட்டி முடிந்ததும் அணி நிர்வாகத்திடமிருந்து வீரர்களுக்கு வரும் செய்தி வெறும் இரண்டே வார்த்தைகள் தான் — ‘நன்றாக விளையாடினீர்கள்’ (Well done) அல்லது ‘துரதிர்ஷ்டம்’ (Bad Luck) என்பது தான்.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே-வில் 19 சீசன்களுக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாற்றம் அணியின் அனைத்து முக்கிய முடிவுகளையும் தோனியே எடுக்கிறார் என்பதும், அவரது சொல்லே இறுதியானது என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும், முடிவுகளை அவரே தீர்மானிக்கும் இடத்தில் தான் இருக்கிறார். சமீபத்தில் தோனி அமெரிக்காவில் இருந்து திரும்பும் வரை காத்திருந்தே புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை நிர்வாகம் இறுதி செய்துள்ளது.

மேலும் இது வெறும் நிர்வாக ரீதியான முடிவு அல்ல. கிரிக்கெட் கமிட்டி தான் இதை முடிவு செய்தது. தோனியின் பரிந்துரையின் பேரிலேயே இது நடந்தது. அவர் கேப்டன் ருதுராஜுடன் பேசினார், பிறகு இருவரும் உரிமையாளர் ரூபா குருநாத்துடன் விவாதித்து இந்த முடிவுக்கு வந்தனர்” என்று சிஎஸ்கே தலைமை நிர்வாகி (CEO) காசி விஸ்வநாதன் கிரிக்பஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஜாகீர் கான் ஓராண்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.

தோனியும் ஜாகீர் கானும் இந்திய அணிக்காக 2004 முதல் 2014 வரை ஒன்றாக விளையாடியவர்கள். மொத்தம் 164 சர்வதேச போட்டிகளில் இணைந்து களமிறங்கியுள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக சி.எஸ்.கே இழந்திருந்த அந்த பழைய அதிரடி ஆட்டத்தை இவர்கள் மீண்டும் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு, சிஎஸ்கே நிர்வாகம் சில வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸியின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து அதே பேட்டிங் பயிற்சியாளர் பணியிலேயே நீடிப்பார் என்று தெரிகிறது.

ஜாகீர் கானைப் பொறுத்தவரை, ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இது அவருக்கு மூன்றாவது முறை. 2025 சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் ஆலோசகராக அவர் ஓராண்டு பணியாற்றினார். அதேசமயம், 2018 முதல் 2023 வரை மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் அவர் இருந்த காலம் மிகவும் மறக்க முடியாதது.

அந்தக் காலகட்டத்தில் மும்பை அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது சென்னை அணியில் தோனி-ருதுராஜ்-ஜாகீர் கான் கூட்டணி உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கியப் பணிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். 2017 ஜூலை மாதம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) ஜாகீர் கானை இந்திய பந்துவீச்சு பயிற்சியாளராகப் பரிந்துரைத்தது. ஆனால் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பாரத் அருணையே தேர்வு செய்தார்.

இருந்தாலும், இளம் வீரர்களிடம் ஜாகீர் கானுக்கு நல்ல மரியாதையும், வழிகாட்டும் திறனும் உண்டு. தற்போதைய ஒப்பந்தம் ஓராண்டு மட்டுமே என்றாலும், அவருக்கு முன்னிருந்த பிளெமிங் போல நீண்ட காலம் இல்லாவிட்டாலும், சிஎஸ்கே அணியில் நீண்ட காலம் தொடர்வதில் அவர் நிச்சயம் வெற்றி பெறக்கூடும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top