Times of Puducherry
2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த போட்டிக்கான ஏலம் கோவாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 19 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 20-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது, முதலில் 8 அணிகளுடன் தொடங்கப்பட்ட இந்த தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகிறது. இதனிடையே கிரிக்பஸ் இணையதளத்தின்படி 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் பாதியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இந்த ஏலம் டிசம்பர் 14 முதல் 16-க்குள் ஏலம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படும் நிலையில், இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் முடிந்துவிடும். கடந்த மூன்று ஆண்டுகளில், துபாய், ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் ஏலம் நடைபெற்றது. தற்போது ஐபிஎல் அணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, இந்தியாவில் ஏலத்தை நடத்த சமீபத்தில் முடிவு செய்து, வழக்கமான முறையை பிசிசிஐ மாற்றியுள்ளது.
அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால், ஏலம் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடும். 2009-ஆம் ஆண்டில் இரண்டாவது சீசனுக்கான ஏலத்தை கோவா நடத்தியது. இங்கிலாந்தின் இரண்டு நட்சத்திர வீரர்களான கெவின் பீட்டர்சன் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோருக்குக் கிடைத்த சாதனை விலை அந்த ஏலம் மிகவும் பிரபலமானது. அவர்கள் இருவரையும் தலா 1.55 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, முறையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வாங்குயிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.