Times of Puducherry

117 போட்டிகள், 7 வருட காத்திருப்பு: டி20 போட்டியில் ஷபாலி வர்மா சாதனை சதம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 11:38 AM

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா தனது 7 ஆண்டுகால காத்திருப்பை நிறைவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், ஷஃபாலி 49 பந்துகளில் 100 ரன்கள் (3 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சதமடிப்பதற்கான தனது 7 ஆண்டு கால காத்திருப்பை அவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். இவரது அதிரடியால் இந்தியா, வரும் செப்டம்பர் 22-ந் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது.

முன்னதாக செப்டம்பர் 19-ந் 20-ந் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா 195/4 ரன்கள் குவித்தது. ஷஃபாலி சதம் அடித்து அசத்திய நிலையில், ஹர்மான்ப்ரீத் கவுர் 40 ரன்களும், மந்தனா 37 ரன்களும் எடுத்தனர். 196 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 81 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதில் தோற்கடித்தது.

ஷஃபாலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து இந்தியாவிற்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த ஆட்டத்தின் போது, ஸ்மிருதி மந்தனா மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அவர் நியூசிலாந்தின் சூசி பேட்ஸின் (4,758 ரன்கள்) சாதனையை முறியடித்து, தனது மொத்த ரன்களை 4,788 ஆக உயர்த்தினார்.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது அணிக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்தது. சமீபகாலமாகச் சரியாக ரன் குவிக்காத அவர், 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 81 ரன்களில் சுருண்ட நிலையில், இந்திய அணியின் நந்தினி சர்மா மற்றும் தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேச அணியை கட்டுப்படுத்தினர்.

ஷஃபாலியைப் பொறுத்தவரை, 2019-ல் டி20 போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து இருந்த ஒரு பெரிய தடையை உடைத்த நாளாக இந்த நாள் அமைந்தது. இந்தச் சதத்தை அடிக்க அவருக்கு 118 போட்டிகள் தேவைப்பட்டன. 22 வயதான ஷஃபாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், ஆட்டத்தின் போது எந்தச் சிரமத்தையும் காட்டவில்லை. போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே சஞ்சிதா அக்டரின் பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து தனது அதிரடியைத் தொடங்கினார்.

இது குறித்து பேசிய அவர், இந்த சதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே, ஒரு டி20 சதமடிக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். அதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது எனக்குத் தெரியும், ஆனால் இறுதியாக அது சாத்தியமானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்று நிம்மதியுடன் ஷஃபாலி கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top