Times of Puducherry
கவுகாத்தியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுப்மான் கில், இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இந்த கோட்டியில் டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்தது.
ஜான் சேம்பல் 101, கேப்டன் ஹோப் 104, அமிர் ஜான்கோ 114 என 3 வீரர்கள் சதம் அடித்தனர். இந்திய அணியில் குல்தீப், ஜடேஜா, ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்து 406 ரன்கள் இமாலய இலக்கு்டன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் – கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26. ஓவர்களில் 255 ரன்கள் சேர்த்து அசத்தியது. சதம் கடந்த ரோகித் சர்மா 101 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ருத்துராஜ் கில்லுடன் இணைந்து ஆடினார். சதம் அடித்து அசத்திய கில், வெற்றியை நெருக்கும்போது இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சுப்மான் கில் தனது 2-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவரது முதல் இரட்டைச் சதம் 2023-ல் நியூசிலாந்திற்கு எதிராக பதிவு செய்திருந்தார். அதில் அவர் 208 ரன்கள் எடுத்தார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா மட்டுமே ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரராக இன்னமும் அவரே நீடிக்கிறார்.
இந்த ஆண்டில் கில் அபாரமான ஃபார்மில் உள்ளார். 2026-ல் இதுவரை ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 100-க்கும் அதிகமாக உள்ளது. தொடரின் முதல் போட்டியில், 296 ரன்கள் கொண்ட இலக்கை சேஸ் செய்தபோதும் கில் ஒரு சதம் அடித்திருந்தார். மேலும், இந்த போட்டியில் கில் அடித்த இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டைச் சதமாகும். கில் வெறும் 117 பந்துகளில் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார். இதில் 24 பவுண்டரிகளையும் 7 சிக்ஸர்களையும் விளாசினார்.
அதிவேக ஒருநாள் இரட்டைச் சதங்கள் (பந்துகளின் அடிப்படையில்):
117 – சுப்மன் கில் vs மேற்கிந்தியத் தீவுகள் – கவுகாத்தி, 2026
126 – இஷான் கிஷன் vs வங்கதேசம் – சட்டாகிராம், 2022
128 – கிளென் மேக்ஸ்வெல் vs ஆப்கானிஸ்தான் – வான்கடே, 2023
136 – பதும் நிசாங்கா vs ஆப்கானிஸ்தான் – பல்லேகலே, 2024
138 – கிறிஸ் கெய்ல் vs ஜிம்பாப்வே – கேன்பரா, 2015
சேஸிங்கின் தொடக்கத்திலிருந்தே கில் ரன் வேட்டையாடத் தீவிரமாக இருந்தார். அவர் தனது சதத்தையும் வெறும் 62 பந்துகளில் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் தனது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் இணைந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டாவது மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப்பையும் இவர்கள் பதிவு செய்தனர்.
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்கான அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்:
258 – சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி vs கென் பார்ல் – 2001
255 – ரோஹித் சர்மா – சுப்மன் கில் vs மேற்கிந்தியத் தீவுகள் – குவாஹாத்தி 2026
252 – சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி vs இலங்கை – கொழும்பு – 1998
231 – ஷிகர் தவான் – அஜிங்கிய ரஹானே vs இலங்கை – கட்டாக் – 2014இந்த போட்டியில் 406 ரன்கள் சேஸிங் செய்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் மிக உயர்ந்த சேஸிங்கை பதிவு செய்துள்ளது, மேலும் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒட்டுமொத்தமாக இரண்டாவது மிக உயர்ந்த வெற்றி பெற்ற சேஸிங் ஆகும். கில் வெறும் 133 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 167.67 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் அவர் போட்டியை முடித்து வைத்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.