Times of Puducherry

50 ஆண்டுகால இசைச் சாதனை; ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இளையராஜாவிற்கு உச்சகட்ட கவுரவம்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 9:25 AM
Ilaiyaraaja honoured Australian Parliament for 50 years in cinema

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், கடந்த ஜூலை மாதம் முதல் உலகம் முழுவதும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 26 அன்று சிட்னியிலும், அக்டோபர் 5 அன்று பிரிஸ்பேனிலும் அவரது இசை கச்சேரிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டின் பெருமையை உலகரங்கில் உயர்த்திய இசைஞானி இளையராஜாவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், 50 ஆண்டு கால இசைப் பயணத்தை பாராட்டும் விதமாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டுள்ளார்.

 இந்தக் கவுரவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் ஒரு சிறிய தொலைதூரக் கிராமத்தில் பிறந்து, இன்று ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டிருப்பது என் நெஞ்சை நெகிழ வைக்கிறது. என் இசைக்கு உயிர் கொடுத்த லட்சக்கணக்கான மக்கள், என்னோடு பயணித்த கலைஞர்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக என் இசையைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்தத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top