Times of Puducherry

மாணவர்கள் போதைப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

எழுதியவர்: நிருபர் குழு
2 நிமிட வாசிப்பு
7 Sep 2026 • 1:25 PM
Vice President urges youth to shun substance abuse

அஸ்ஸாம் குவாகாத்தில் கீதாநகர் கல்லூரியின் பொன்விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“போதைக்கு இல்லை என்று சொல்லுங்கள்; உங்கள் நண்பர்களையும் அவ்வாறே ஊக்குவியுங்கள்” என்ற அவர், கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு, உயிர்தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இணைஞருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் ஆதாரம்: ஆகாஷ்வாணி செய்திகள் (பிரசார் பாரதி), 6 செப்டம்பர் 2026. செய்தி எங்கள் செய்திப் பிரிவினால் தமிழில் எழுதப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top