Times of Puducherry
புதுதில்லி சத்ய நிகேதன் பகுதியில் கட்டடம் இடிந்த சமயத்தில், எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகள் அனைத்த வகையான மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடுமப் நலத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுடன் தொலைபேசியில் பேசிய அமைச்சர், சுகாதார அமைச்சகம் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
காயமடைந்தவர்களுக்குத் தேவையான பட்சைகள், மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் தயாராக இருக்க வேண்டும் என மருத்துவமனை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தகவல் ஆதாரம்: ஆகாஷ்வாணி செய்திகள் (பிரசார் பாரதி), 6 செப்டம்பர் 2026. செய்தி எங்கள் செய்திப் பிரிவினால் தமிழில் எழுதப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.