Times of Puducherry
Guru Peyarchi 2026: நவகிரகங்களில் சுப கிரகமாக அறியப்படும் குரு பகவான் விரைவில் மகம் நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இது 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். இவர் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, சுப நிகழ்வுகள் ஆகியவற்றின் காரகராவார். இவரது ராசி மற்றும் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான பலன்களை வழங்கும். தற்போது கடக ராசியில் பயணித்து வரும் அவர், அக்டோபர் 31 சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அத்துடன் கேது பகவானின் ஆதிக்கம் கொண்ட மகம் நட்சத்திரத்திலும் நுழைகிறார். குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு கிடைக்க உள்ளது.
மேஷம்
மகம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது. இதுவரை நீங்கள் வகித்து வந்த பொறுப்புகளை விட கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் கூடுதல் வருமானத்திற்கான வழிகள் திறக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கிடைக்கும். விற்க முடியாமல் இருந்த பூர்வீக சொத்துக்கள் அல்லது நிலங்கள் நல்ல முறையில் விற்பனையாகும். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
குருவின் மகம் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காலமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழம்பித் தவித்து வந்த அவர்கள், இனி தெளிவாக முடிவெடுத்து சாதித்து காட்டுவீர்கள். தனியார் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு வேலை மாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு திடீரென உயரும். இதனால் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகும் என்பதால் நிதி நிலையுடன், சமூகத்தில் அந்தஸ்தும் உயரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திரம் மாற்றம் சாதகமான பலன்களை வழங்க உள்ளது. வாழ்க்கையில் இதுவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள், இனி அடுத்த கட்டத்தை நோக்கிச்செல்வீர்கள். முன்னேற்றத்தை நோக்கி நகரும் காலம் கணிந்து உள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தகராறுகள் முடிவுக்கு வரும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார ரீதியான மாற்றங்களை கண்கூடாக காண்பீர்கள். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள், சொந்த வீட்டுக்கு மாறும் வாய்ப்புகளும் உருவாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். ஒரே வருமானத்தை நம்பி இருந்தவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும் காலம் நெருங்கியுள்ளது. வேலையில்லாத அல்லது படித்து முடித்த இளைஞர்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்கள் அல்லது நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் மாறி ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.