Times of Puducherry

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 8:27 PM
graduation-kanthasamy naidu colleage

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் 1250 மாணவிகளுக்கு பச்சையப்பன் அடிக்கட்டளை தலைவர் திரு.S.ஜெயசந்திரன் முன்னிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் 1250 மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணைமேயர் திரு.தாமரைசெல்வன் மற்றும் கல்லூரி முதல்வர் கோமதி பேராசிரியர் ஸ்ரீராம் பச்சையப்பா அறக்கட்டளை S பரமசிவம் மற்றும் பிரபாகரன் சரவணன் சினோரா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப்பட்டமளிப்பு விழாவில் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் நாடாளுமன்றத்தில் 33 சதவிதம் இட ஒதுக்கீடு என்பது கட்டாயம் நடைமுறைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

ஆகவே பெண்கள் படிப்பறிவு மட்டும் அல்லாமல் பேச்சாற்றிலும் தனித்துவமாக வளர வேண்டும் பெண்கள் ஆளுமைக்கு உட்பட்டவராக வர இயலும் என்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவிகளை திருமாவளவன் MP அவர்கள் வாழ்த்தி பேசினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top