Times of Puducherry
கோவா செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அதிலும், இந்தியர்களின் பக்கெட் லிஸ்டில் கோவா எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது கோவா சென்றுவிட வேண்டும் என்று பல இந்தியர்களும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இதற்கான திட்டத்தை போடும் போது அவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பட்ஜெட்டாக தான் இருக்கும்.
கோவாவிற்கு செல்ல அதிக பட்ஜெட் தேவைப்படுமே என்று தோன்றலாம். ஆனால், வெறும் ரூ.500-ல் நீங்கள் கோவாவை சுற்றி பார்க்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆமாம் ரூ.500 நீங்கள் கோவாவை சுற்றி பார்க்கலாம். கோவா சுற்றுப்பயணத்தின் போது போக்குவரத்துச் செலவைக் குறைக்க விரும்புவோருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடகை திட்டங்கள் சிறந்த தீர்வாக அமைகின்றன. டாக்ஸி கட்டணம் மற்றும் பெட்ரோல் செலவுகளைத் தவிர்த்து, மிகக் குறைந்த செலவில் கோவாவைச் சுற்றிப் பார்க்க இவை உதவும்.
வாடகை கட்டணம் மற்றும் திட்டங்கள்
தினசரித் திட்டம்: ஒரு நாள் பயணம் ரூ.500-ல் இருந்து தொடங்குகிறது (100 கி.மீ இலவசப் பயணம்).
வாராந்திரத் திட்டம்: 7 நாட்கள் தங்குவோருக்கு ரூ.2,500 (750 கி.மீ இலவசப் பயணம்).
மாதாந்திரத் திட்டம்: நீண்ட நாள் தங்குபவர்களுக்கு ரூ.6,000 (2,000 கி.மீ இலவசப் பயணம்).
கூடுதல் கட்டணம்: இலவச கிலோமீட்டர் வரம்பு முடிந்த பிறகு, கிலோமீட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு 20% வரை தள்ளுபடியும் உண்டு.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வகைகள்
BattRE: ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ வரை பயணிக்கலாம். சார்ஜ் ஏற 2.5 மணி நேரம் ஆகும். வட கோவாவிலிருந்து தெற்கு கோவா வரை செல்ல இது ஏற்றது.
Hero NYX: 160 கிலோ வரை எடையை சுமக்கும் திறன் கொண்டது. அதிக லக்கேஜ் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றது (ரேஞ்ச்: 110 கி.மீ).
JMT1000HS: உள்ளூர் இடங்கள் மற்றும் அருகிலுள்ள பீச்சுகளுக்குச் செல்லப் பயன்படும் ஸ்டைலான ஸ்கூட்டர் (ரேஞ்ச்: 90 கி.மீ).
முன்பதிவு செய்யும் முறை
இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளைத் தெளிவாக பதிவேற்ற வேண்டும்.
தெளிவான செல்ஃபி புகைப்படத்தை இணைக்க வேண்டும் (ஆவணங்கள் சரிபார்க்க 24 மணி நேரம் வரை ஆகலாம்).
சரிபார்ப்புக்குப் பிறகு, ஒதுக்கப்பட்ட டாக் லொகேஷனில் இருந்து ஸ்கூட்டரைப் பெற்றுக் கொள்ளலாம்.
முக்கியப் பயண விதிகள்
அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையுடன் வைத்திருக்க வேண்டும்.
தலைக்கவசம் அணிவது கட்டாயம்.
போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் மற்றும் ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்த வேண்டும்.
விலைகள் மற்றும் நிபந்தனைகள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், முன்பதிவு செய்யும் முன் அதிகாரப்பூர்வ தளத்தில் விவரங்களை சரிபார்த்து கொள்வது நல்லது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.