Times of Puducherry

ஜெம் வீரமணி வழக்கு: பொதுமக்கள் தகவல் அளிக்க போலீஸ் வேண்டுகோள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 9:57 PM
Gem Veeramani case Police appeal to the public for information whats app no

தொழில் அதிபர் ஜெம் வீரமணி வழக்கில் மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தகவல் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளுக்கு எதிரான வழக்கு மற்றும் அது தொடர்பாக பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team – SIT) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று, (28.09.2026) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேற்படி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top