Times of Puducherry

கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Sep 2026 • 5:06 PM
flight-students-dmk

புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், 20 மாணவர்களுக்கு முதல் முறையாக விமானத்தில் கொல்கத்தா செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு பல்வேறு சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட மாணவர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியை சந்தித்து கலந்துரையாடினர். இந்தப் பயணத்தில் மாணவர்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரும் பங்கேற்றார்.

புதுச்சேரி பாகூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்

அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பாண்டிச்சேரி ரிவாச் ரவுண்ட் டேபிள் 104 உடன் இணைந்து பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்

மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பாகூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சமூக சேவகர் அசோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்து மட்டுமின்றி, மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரும் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்ற மாணவர்கள் அனைவரும் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பயணம் அவர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்ததுடன், விமானப் பயணம் உள்ளிட்டவற்றை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப் பயணத்தின் முக்கிய சிறப்பம்சமாக, மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. கங்குலியை நேரில் சந்தித்தது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். இதன் மூலம் பாடப்புத்தகங்களில் படிக்கும் வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளும் அனுபவத்தை பெற்றனர். மேலும், பயணத்தின் மூலம் புதிய இடங்கள், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பல்வேறு வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்தது. காலை சென்னையில் இருந்து புறப்பட்ட மாணவர்கள், ஒரு நாள் முழுவதும் கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அதே நாள் இரவு மீண்டும் புதுச்சேரி திரும்பினர்.

விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தது, கொல்கத்தாவை நேரில் பார்த்தது, வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட்டது மற்றும் சௌரவ் கங்குலியை சந்தித்தது என இந்தப் பயணம் மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

மேலும் இந்த சிறப்பு விமானப் பயணத்தை ஏற்பாடு செய்த பாண்டிச்சேரி ரிவாச் ரவுண்ட் டேபிள் 104 அமைப்பு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இதுபோன்ற அனுபவங்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top